மும்பை மேயர் பதவிக்கு சோனு சூட் போட்டி?

மும்பை மேயர் பதவிக்கு சோனு சூட் போட்டி?
x
தினத்தந்தி 25 Aug 2021 6:25 PM GMT (Updated: 2021-08-25T23:55:07+05:30)

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் நடை பயணமாக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானம் அனுப்பி அழைத்து வந்தார். 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதியோடு வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து கொடுத்தார். அவரது சமூக சேவை பணிகளில் ஈர்க்கப்பட்ட ஒரு மாநில அரசு சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி, சீட் வழங்க முன்வந்ததாகவும், அதை ஏற்க சோனுசூட் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சோனுசூட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு நிறுத்த மாராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. சோனுசூட்டை மேயர் பதவி வேட்பாளராக களம் இறக்கும்படி கட்சியின் மாநில செயலாளர் கணேஷ்குமார் யாதவ் காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Next Story