சினிமா செய்திகள்

திருமண மோசடி புகார்: போலீசுக்கு நன்றி சொன்ன ஆர்யா + "||" + Marriage fraud complaint: Arya thanks police

திருமண மோசடி புகார்: போலீசுக்கு நன்றி சொன்ன ஆர்யா

திருமண மோசடி புகார்: போலீசுக்கு நன்றி சொன்ன ஆர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா 2019-ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா 2019-ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.70 லட்சம் மோசடி செய்து விட்டதாக ஜெர்மனியை சேர்ந்த இலங்கை பெண் போலீசில் புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.


ஆர்யாவுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜெர்மனி பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று ஆர்யா மறுத்தார். புகார் அளித்த பெண்ணிடமும் வீடியோ காலில் விசாரிக்கப்பட்டது.

அப்போது ஆர்யாவைப்போல் பேசி ஜெர்மனி பெண்ணிடம் 2 பேர் பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உண்மை குற்றவாளிகளை கைது செய்த சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர், சென்னை சைபர் கிரைம் போலீசார் ஆகியோருக்கு நன்றி. இது என்னால் வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாராட்டு
ஈரோடு திண்டலில் இருந்து நல்லியம்பாளையம் செல்லும் சாலையில் பாலாஜி ஆர்கேட் செல்லும் வழியில் நடுரோட்டில் பாலம் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் இருந்தது. ஆபத்தான இந்த பள்ளம் குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியானது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மண்போட்டு மக்கள் பிரச்சினையை பிரசுரித்த தினத்தந்திக்கு நன்றி.
2. ‘வெப்’ தொடரில் ஆர்யா
‘வெப்’ தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் ‘வெப்’ தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
3. ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
4. சாந்தனுவுக்கு ஆர்யா நடன பயிற்சி அளிப்பாரா?
பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் வாரிசு சாந்தனு, திறமையாக நடனம் ஆடுபவர்.