நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம்; ரசிகர்கள் மகிழ்ச்சி


நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம்; ரசிகர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Aug 2021 5:51 AM GMT (Updated: 26 Aug 2021 5:51 AM GMT)

நீக்கம், ரசிகர்கள் மகிழ்ச்சி நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம் ரசிகர்கள் மகிழ்ச்சி




சென்னை,


நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன.  அவரது நடவடிக்கையால் நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், இதனால் அவரின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது எனவும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதாக பெப்சி அறிவித்தது.  இந்த நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலம்பரசனின் தாயார் உஷா, மகனின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியுள்ளது.  வெந்து தணிந்தது காடு படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவித்துள்ளது.

திரைப்பட படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளாததால் நஷ்டம் அடைந்ததாக மைக்கேல் ராயப்பன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.  இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில், நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Next Story