சினிமா செய்திகள்

மன்னிப்பு கேட்ட சமந்தா + "||" + Samantha apologized

மன்னிப்பு கேட்ட சமந்தா

மன்னிப்பு கேட்ட சமந்தா
பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுவரை அதுகுறித்து கருத்து சொல்லாமல் இருந்த அவர் தற்போது முதல் தடவையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுவரை அதுகுறித்து கருத்து சொல்லாமல் இருந்த அவர் தற்போது முதல் தடவையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமந்தா அளித்துள்ள பேட்டியில், “வெப் தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அதில் நான் நடிக்கவில்லை. மக்கள் உணர்வை மதிக்கிறேன். எனது நடிப்பு யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


பேமிலிமேன் வெப் தொடரில் சமந்தா போராளியாக நடித்து இருந்தார். அவரது கதாபாத்திரம் இலங்கை தமிழர்களை புண்படுத்துவதாக உள்ளது என்று கண்டனங்கள் கிளம்பின. தொடருக்கு தடை விதிக்கும்படி அரசியல் கட்சிகள் வற்புறுத்தின. ஆனால் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் அந்த தொடர் வெளியானது. சமந்தா சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் ஓய்வு எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நகை தொழிலில் இறங்கும் சமந்தா
நகை தொழிலில் இறங்கும் சமந்தா.
2. வில்லியாக நடிக்கும் சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘த பேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
3. புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா
சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார்.