சினிமா செய்திகள்

தவறு செய்துவிட்டதாக வருந்தும் ஷில்பா ஷெட்டி + "||" + Shilpa Shetty regrets making a mistake

தவறு செய்துவிட்டதாக வருந்தும் ஷில்பா ஷெட்டி

தவறு செய்துவிட்டதாக வருந்தும் ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படம் தயாரித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது மாடல் அழகிகளும், நடிகைகளும் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இதில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அவர் மனம் உடைந்து கணவரை கண்டித்து கண்ணீர்விட்டு அழுததாக கூறப்பட்டது. கணவர் மீதுள்ள கோபத்தில் ஜெயிலில் போய் அவரை பார்க்காமல் ஒதுக்கி விட்டதாகவும், பேசுகிறார்கள். 

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறு செய்து விட்டதாக பதிவு வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, “தவறுகள் செய்யாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன்'' என்ற வாசகத்தையும் வெளியிட்டு இருக்கிறார். ராஜ்குந்த்ராவை திருமணம் செய்ததைத்தான் தவறு செய்துவிட்டேன் என்று ஷில்பா ஷெட்டி சொல்கிறார் என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.