சினிமா செய்திகள்

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது, நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு - நடிகர் வடிவேலு + "||" + The feeling I had when I was looking for an opportunity - actor Vadivelu

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது, நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு - நடிகர் வடிவேலு

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது, நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு - நடிகர் வடிவேலு
மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
சென்னை,

இயக்குனர் ஷங்கர் - நடிகர் வடிவேலு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 

இந்தநிலையில்,  தந்தி டிவிக்கு நடிகர் வடிவேலு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.  மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில்  நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். 

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறு பிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன்.  2 படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன் என்றார்.