சினிமாவை விட்டு சமந்தா விலகல்?


சினிமாவை விட்டு சமந்தா விலகல்?
x
தினத்தந்தி 28 Aug 2021 10:01 AM GMT (Updated: 2021-08-28T15:31:55+05:30)

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து எதிர்ப்புக்கும் உள்ளானார்.

தற்போது புராண கதையான சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக நடித்து முடித்துவிட்டு விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்கள் தவிர புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் சில காலம் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக சமந்தா அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் நிரந்தரமாக சினிமாவை விட்டு விலகப்போவதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி பெயரை நீக்கியதும் கணவரை பிரியப்போகிறார் என்று வதந்திகள் பரவின. கணவர் வீட்டார், நடிக்க வேண்டாம் என்று நிர்ப்பந்தம் செய்வதால் சினிமாவை விட்டு விலகுகிறாரா? என்றும் சிலர் சந்தேகம் கிளப்பி வருகிறார்கள். ஆனாலும் சிலகால இடைவெளிக்கு பிறகு சமந்தா மீண்டும் நடிப்பார் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Next Story