சினிமா செய்திகள்

அபிஷேக் பச்சன் காயம் + "||" + Abhishek Bachchan injured

அபிஷேக் பச்சன் காயம்

அபிஷேக் பச்சன் காயம்
படப்பிடிப்பில் அபிஷேக் பச்சனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. பார்த்திபன் இயக்கி நடித்து 2019-ல் வெளியான படம் ஒத்த செருப்பு, இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்து இருந்ததால் வித்தியாசமான படமாக பேசப்பட்டது. பலரும் படத்தை பாராட்டினர். விருதுகளும் பெற்றது.
ஒத்த செருப்பு தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தையும் பார்த்திபனே இயக்க அவரது கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் அபிஷேக் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மும்பை சென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து, “படப்பிடிப்பில் மோசமான விபத்தில் சிக்கி எனது வலது கை முறிந்தது. மும்பை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு பிறகே அவர் விபத்தில் சிக்கிய தகவல் தெரியவந்துள்ளது.