சினிமா செய்திகள்

5 மொழிகளில் விஜய் சேதுபதி படம் + "||" + Vijay Sethupathi film in 5 languages

5 மொழிகளில் விஜய் சேதுபதி படம்

5 மொழிகளில் விஜய் சேதுபதி படம்
விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் யதார்த்தமான கதைகளிலும், வில்லன் வேடங்களிலும் நடிப்பதால் அவருக்கு கைநிறைய படங்கள் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. விஜய்சேதுபதி சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார். கதாநாயகனாக நடிக்க ரூ.15 கோடியும், வில்லன் கதாபாத்திரங்களுக்கு ரூ.10 கோடியும் கேட்பதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப்புடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. விஜய்சேதுபதி தற்போது கமல்ஹாசனுடன் விக்ரம், விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.