பாட்டி பராமரித்த அழகு ரகசியம்! - கீர்த்தி சுரேஷ் பேட்டி


பாட்டி பராமரித்த அழகு ரகசியம்! - கீர்த்தி சுரேஷ் பேட்டி
x
தினத்தந்தி 29 Aug 2021 9:22 AM GMT (Updated: 2021-08-29T14:52:36+05:30)

கீர்த்தி சுரேஷ் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்துகிறார். சுத்தமான - இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்களை அவர் விற்பனை செய்வதாக கூறுகிறார்.

இதுபற்றி அவர் மேலும் சொல்கிறார்:-

‘‘என் பாட்டி உள்பட பல பெண்கள் அவர்களின் அழகை பராமரிக்க இயற்கை பொருட்களை நம்பியிருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். அது இன்று வரை என் மனதில் பசுமையாக இருக்கிறது. பண்டைய இயற்கை பொருட்களின் செயல் திறன் என் தோலுக்கு முழுமையான மற்றும் நீடித்த நன்மையை வழங்கியது.

இயற்கையான தோல் பராமரிப்பின் நன்மையை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்தன்மை மிக்க தயாரிப்புகளை கொண்டு அழகை பராமரிக்கலாம்.’’

Next Story