பிரியங்கா சோப்ரா காயம்


பிரியங்கா சோப்ரா காயம்
x
தினத்தந்தி 29 Aug 2021 10:08 PM GMT (Updated: 2021-08-30T03:38:43+05:30)

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயாகியாக உயர்ந்தார்.

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயாகியாக உயர்ந்தார். பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிக்க லண்டன் சென்றுள்ளார். அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த தொடர் தயாராகி வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பிரியங்கா சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு புருவ பகுதியில் அடிபட்டு ரத்தம் வழிவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பிரியங்கா சோப்ரா, “எனக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் புருவத்தில் இல்லை. கன்னத்தில்தான் காயம் ஏற்பட்டு இருக்கிறது'' என்றார். கன்னத்தில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Next Story