சினிமா செய்திகள்

நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது + "||" + International Award for Actress Magima

நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது

நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மகாமுனி படம் ஸ்பெயினில் நடந்த மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


இந்த நிலையில் மேட்ரிக் பட விழாவில் மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மகிமா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாமுனி படத்தில் நடித்ததற்காக மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை. படத்தின் இயக்குனர் சாந்தகுமாருக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ள ஐங்கரன் படம் திரைக்கு வர தயாராக உள்ளது. சூர்யா தயாரிப்பில் அருண் விஜய்யுடன் ‘ஓ மை டாக்’ மற்றும் கிருஷ்ணாவுடன் ‘பெல்பாட்டம்’ படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வருகிறார். இரண்டு மலையாள படங்களிலும் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
2. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருது மத்திய மந்திரி வழங்கினார்
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருதை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார்.
3. மெல்போர்ன் திரைப்பட விழா சூர்யா, சமந்தாவுக்கு விருது
மெல்போர்ன் திரைப்பட விழா சூர்யா, சமந்தாவுக்கு விருது.
4. கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’
கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’.
5. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள குமரி வீராங்கனை டெல்லி பயணம்
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்காக குமரி வீராங்கனை போலந்து செல்கிறார். இதற்காக இரவோடு இரவாக டெல்லிக்கு புறப்பட்டார்.