சினிமா செய்திகள்

ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ் + "||" + Keerthi Suresh in the remake movie

ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ்

ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ்
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மிமி’. இதில் கிரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மிமி’. இதில் கிரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். லட்சுமன் உதேக்கர் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். படத்தில் இடம் பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டியொட்டியெங்கும் கலக்கியது. கிரித்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்துள்ளன. 2011-ல் மராத்தி மொழியில் வெளியான மலா ஆய் ஹய்ச்சி படத்தின் இந்தி ரீமேக்கே மிமி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மிமி படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். இரண்டு மொழிகளிலுமே கிரித்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன், அதர்வா - ஜோடி கீர்த்தி சுரேஷ்
பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயனாக அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
2. தொழில் அதிபரான கீர்த்தி சுரேஷ்
நடிகைகள் சினிமாவில் சம்பாதிப்பதோடு ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், ஓட்டல் தொழில், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், ஜவுளி கடைகள் என்றெல்லாம் தொழில் செய்கிறார்கள்.
3. ‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்
‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.