சினிமா செய்திகள்

சினிமா துறைக்கு நல்லது நடக்கும் - நடிகர் விஷால் + "||" + Good things will happen to the film industry - Actor Vishal

சினிமா துறைக்கு நல்லது நடக்கும் - நடிகர் விஷால்

சினிமா துறைக்கு நல்லது நடக்கும் - நடிகர் விஷால்
நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘'ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதை வரவேற்கிறேன்.
நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘'ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும். ஸ்டாலின் நன்றாக ஆட்சி நடத்துவார் என்பதால்தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர். ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசுவதால் அ.தி.மு.க.வுக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம். நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனால் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ முடியவில்லை'' என்றார். விஷால் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். குழந்தைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று உணவும் வழங்கினார். விஷாலுக்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி பிரபல நடிகர் காயம்
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
2. ‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல்
‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல்.
3. அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்.
4. சமந்தா பட நடிகர் கைது
பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணுடு. இவர் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் வெளியான ஏ மாய சேசாவே மற்றும் விநாயகுடு படங்களில் நடித்து பிரபலமானார்.
5. சினிமாவில் நடிக்க தடை நீங்கியது மகிழ்ச்சி- நடிகர் வடிவேல்
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை.