கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்கின்றனர். விஜய்சேதுபதி பேட்ட, விக்ரம்வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். அர்ஜுன், கார்த்திக், அரவிந்தசாமி ஆகியோரும் வில்லனாக நடித்து இருக்கிறார்கள்.
கதாநாயகிகளும் வில்லி வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஜோதிகா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வில்லி வேடம் ஏற்றார். சிம்ரன் ஐந்தாம்படை, சீமராஜா படங்களுக்கு பிறகு தற்போது கார்த்தியின் சர்தார், பிரசாந்தின் அந்தகன் படங்களில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ரலா வில்லியாக நடித்துள்ளனர். நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தில் வில்லத்தன வேடம் ஏற்றார்.
காஜல் அகர்வால் தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனாவுக்கு அவர் வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் அதிக படங்களில் நடித்து வருகிறார். சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, தமிழில் ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், இந்தியில் உமா ஆகிய படங்களில் நடித்து முடித்து உள்ளார்.