சினிமா செய்திகள்

சினிமாவில் நடிக்க தடை நீங்கியது மகிழ்ச்சி- நடிகர் வடிவேல் + "||" + Actor Vadivelu is happy that the ban on acting in cinema has been lifted

சினிமாவில் நடிக்க தடை நீங்கியது மகிழ்ச்சி- நடிகர் வடிவேல்

சினிமாவில் நடிக்க தடை நீங்கியது மகிழ்ச்சி- நடிகர் வடிவேல்
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தடையினால் 4 வருடங்களாக படங்களில் அவர் நடிக்கவில்லை.

தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு தடை விலக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வடிவேல் மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தயாராகி உள்ளார்.


இதுகுறித்து வடிவேல் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு நடிப்பதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது மகிழ்ச்சி. இது எனக்கு மறுபிறவி, அடுத்து 5 படங்களில் நடிக்க இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியில் எனக்கு 20 வயது குறைந்து இருக்கிறது. நான் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது முதலில் சினிமா வாய்ப்பு கிடைத்த உணர்வை தருகிறது.

எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு வீட்டில் எனது ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். ரசிகர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.

சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் உடனடியாக நடிக்க இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தொடர்ந்து 2 படங்களில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன். பின்னர் படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடிப்பேன்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்.
2. சமந்தா பட நடிகர் கைது
பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணுடு. இவர் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் வெளியான ஏ மாய சேசாவே மற்றும் விநாயகுடு படங்களில் நடித்து பிரபலமானார்.
3. சினிமா துறைக்கு நல்லது நடக்கும் - நடிகர் விஷால்
நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘'ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதை வரவேற்கிறேன்.
4. போதை பொருளுடன் பிரபல நடிகர் கைது
பிரபல இந்தி நடிகர் அர்மான் கோஹ்லி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். அர்மான் கோஹ்லி போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
5. வீடு மாறிய கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது பாரம்பரிய வீட்டில் வசித்து வந்தார்.