சினிமா செய்திகள்

இயக்குனர் பெயரில் பாலியல் தொல்லை நடிகை போலீசில் புகார் + "||" + The actress has lodged a sexual harassment complaint with the police in the name of the director

இயக்குனர் பெயரில் பாலியல் தொல்லை நடிகை போலீசில் புகார்

இயக்குனர் பெயரில் பாலியல் தொல்லை நடிகை போலீசில் புகார்
பிரபல வங்க மொழி நடிகை பாயல் சர்க்கார். இவர் பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
பிரபல வங்க மொழி நடிகை பாயல் சர்க்கார். இவர் பா.ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாயல் சர்க்காருக்கு முகநூல் பக்கத்தில் வங்க மொழி இயக்குனர் ரவி கினாகி பெயரில் தனது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க தேர்வு செய்து இருப்பதாக தகவல் வந்தது.


இதையடுத்து இயக்குனருக்கு நன்றி தெரிவித்த பாயல் சர்க்கார் தொடர்ந்து முகநூல் பக்கத்தில் அவருடன் உரையாடி வந்தார். திடீரென்று இயக்குனரிடம் இருந்து பாயல் சர்க்காருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியான பாயல் அந்த பதிவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

உடனே ரசிகர்கள் அது இயக்குனரின் உண்மையான கணக்கா அல்லது போலிகணக்கா பாருங்கள் என்றனர். பாயலும் அந்த கணக்கை ஆய்வு செய்தபோது அது இயக்குனர் பெயரில் உள்ள போலி கணக்கு என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் பாயல் சர்க்கார் புகார் செய்தார். இயக்குனர் ரவிகினாகி கூறும்போது, போலி கணக்குகளால் என் போன்றவர்களுக்கு கெட்ட பெயர் வருகிறது'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா பின்னணி பாடகி சின்மயி போலீசில் புகார்
சினிமா பின்னணி பாடகி சின்மயி போலீசில் புகார்: தனது கம்பெனி பெயரில், பெண் குழந்தைகள் படம் தவறாக சித்தரிப்பு.
2. விஷால் பட நடிகர் மீது மோசடி புகார்
வீரமே வாகை சூடும் பட வில்லன் நடிகர் பாபுராஜ் மீது மோசடி புகார் கூறப்பட்டதை அடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. 2 முறை கர்ப்பமாக்கிவிட்டு ’நான் இப்போது மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என்கிறார் - இளம்பெண் போலீசில் புகார்
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை கர்ப்பமாக்கிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
4. நில மோசடி வழக்கு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூரி 2-வது முறையாக ஆஜர்
ரூ.2.70 கோடி நில மோசடி வழக்கில் பணத்தை இழந்த காமெடி நடிகர் சூரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது முறையாக நேரில் ஆஜரானார்.
5. நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகார்
நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகாரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.