சூர்யாவின் புதிய படம்


சூர்யாவின் புதிய படம்
x
தினத்தந்தி 30 Aug 2021 7:10 PM GMT (Updated: 2021-08-31T00:40:32+05:30)

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரை போற்று படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரை போற்று படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விருதுகளும் வாங்கியது. தற்போது ஞானவேல் இயக்கும் ஜெய்பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்து வருகிறார்.

எதற்கும் துணிந்தவன் படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் வருகிறார். வினய் ராஜ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோரும் உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், கவுதம் மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய 11 இயக்குனர்கள் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். இவர்கள் புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில்தான் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story