அஜித்தின் 2 படங்கள் தெலுங்கில் ‘ரீமேக்'


அஜித்தின் 2 படங்கள் தெலுங்கில் ‘ரீமேக்
x
தினத்தந்தி 30 Aug 2021 7:16 PM GMT (Updated: 2021-08-31T00:46:13+05:30)

வெற்றி பெற்ற பிறமொழி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டுகிறார்.

வெற்றி பெற்ற பிறமொழி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடித்து வசூல் குவித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதுபோல் தமிழில் அஜித்குமார் நடித்த வேதாளம், என்னை அறிந்தால் ஆகிய 2 படங்களையும் தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க உள்ளார்.

வேதாளம் படத்தை சிவாவும், என்னை அறிந்தால் படத்தை கவுதம் மேனனும் இயக்கி இருந்தனர். 2 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. வேதாளம் படம் 2015-ல் வெளியானது. இதில் சுருதிஹாசன், லட்சுமி மேனன் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை சமீபத்தில் சிரஞ்சீவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த படத்துக்கு போலா ஷங்கர் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நடிக்க கீர்த்தி சுரேசும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தமிழில் லட்சுமிமேனன் நடித்த தங்கை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது. என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய், திரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்து இருந்தனர்.

Next Story