சினிமா செய்திகள்

திருமணத்துக்கு தயாராகும் திரிஷா? + "||" + Trisha getting ready for marriage?

திருமணத்துக்கு தயாராகும் திரிஷா?

திருமணத்துக்கு தயாராகும் திரிஷா?
நடிகை திரிஷா படங்களில் நடிப்பதை குறைத்து திருமணத்துக்கு தயாராகிறார்.
நடிகை திரிஷா படங்களில் நடிப்பதை குறைத்து திருமணத்துக்கு தயாராகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இப்போது திரிஷா கைவசம் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் மட்டுமே உள்ளது.


கதாநாயகர்கள் இளம் நடிகைகளை ஜோடியாக்குவதால் திரிஷாவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் 38 வயதாகும் திரிஷா திருமணம் செய்து செட்டில் ஆக முடிவு செய்து இருப்பதாகவும் இதற்காக பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் இணைய தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே திரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகி ரத்தானது. திரிஷா 1999-ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்று பிரசாந்தின் ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் மவுனம் பேசியதே, லேசா லேசா படங்களில் கதாநாயகியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. திரிஷா ஒரு அசைவப்பிரியை
திரிஷா, ஒரு அசைவப்பிரியை. அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்.
2. படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வர மறுப்பு; திரிஷா மீது பட அதிபர் புகார்
ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு திரிஷா வராததால், அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட அதிபர் புகார் கொடுத்து இருக்கிறார்.