இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா சில மணி நேரங்களில் 14 லட்சம் தொடர்பவர்கள்


இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா  சில மணி நேரங்களில் 14 லட்சம் தொடர்பவர்கள்
x
தினத்தந்தி 31 Aug 2021 11:26 AM GMT (Updated: 2021-08-31T16:56:13+05:30)

ஜோதிகா இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதனை சூர்யாவும் தனது இன்ஸ்டாகிராமில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.சென்னை

தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். 

36 வயதினிலே,நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் தற்போது ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 நடித்துக்கொண்டே பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறார்.இந்த நிலையில், ஜோதிகா இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதனை சூர்யாவும் தனது இன்ஸ்டாகிராமில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாவில் தேசியக்கொடியுடன் ஜோதிகா இமயமலையில் டிரெக்கிங் செல்லும்  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  இரண்டு லட்சம் பேருக்குமேல் பக்கத்தை விரும்பி உள்ளனர்.

ஜோதிகா இணைந்து சில மணி நேரங்களில் 14 லட்சம் பேர்  பின்தொடர்கிறார்கள். இன்னும் சில நாட்களில் 2 கோடி பின்தொடர்பவர்களுடன் பெற்று முதலிடத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவையே ஜோதிகா முந்திவிடுவார்.

Next Story