மீண்டும் வாய்ப்பு ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே


மீண்டும் வாய்ப்பு ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
x
தினத்தந்தி 31 Aug 2021 7:08 PM GMT (Updated: 2021-09-01T00:38:20+05:30)

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தீபிகா படுகோனே 2017-ல் வெளியான ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் 3-ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இரண்டு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஜோடிகளின் காதலை மையமாக வைத்து தயாராகிறது. இந்த படத்தை இரண்டு பட நிறுவனங்களுடன், தீபிகா படுகோனேவின் கா புரொடக்‌ஷன் பட நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதுகுறித்து தீபிகா படுகோனே கூறும்போது, “இரு நாடுகளின் கலாசாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கான படங்களை தயாரிக்கவே பட நிறுவனம் தொடங்கினேன்'' என்றார்

Next Story