சினிமா செய்திகள்

வடிவேல் சம்பளம் ரூ.10 கோடி? + "||" + Vadivelu's salary is Rs 10 crore?

வடிவேல் சம்பளம் ரூ.10 கோடி?

வடிவேல் சம்பளம் ரூ.10 கோடி?
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட சர்ச்சையால் பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேல் இப்போது தடை நீங்கியதால் மீண்டும் நடிக்க வருகிறார்.
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட சர்ச்சையால் பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேல் இப்போது தடை நீங்கியதால் மீண்டும் நடிக்க வருகிறார். ஏற்கனவே முன்னணி கதாநாயகர்கள் படங்களில் சிரிப்பு நடிகராக வந்ததோடு சில படங்களில் கதாநாயகனாவும் நடித்தார். இப்போது மீண்டும் கதாநாயகனாகவே இரண்டாவது சுற்றை தொடங்குகிறார். அவர் நாயகனாக நடிக்க உள்ள படத்துக்கு நாய் சேகர் என்று பெயர் வைத்துள்ளனர். தலைநகரம் படத்தில் வடிவேல் நடித்த நாய்சேகர் என்ற கதாபாத்திரத்தின் பெயரையே படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். சுராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


இந்த நிலையில் நாய்சேகர் படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இது உறுதிப்படுதப்படவில்லை. நகைச்சுவை நடிகராக நடித்தபோது ஒருநாள் சம்பளமாக வடிவேல் ரூ.10 லட்சம் வரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேல் கூறும்போது, “படங்களில் நடிப்பது எனக்கு மறுபிறவி மாதிரி. தொடர்ந்து 5 படங்களில் நடிக்க உள்ளேன்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இணையதள படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்
இணையதள படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்.
2. தடையை மீறி துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்கிறாரா?
நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படங்களில் நடிக்க தடை விதித்து பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார்.
3. 66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.
4. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளம்
கதைகள் அனைத்தும் தன் கதாபாத்திரங்களின் மீது பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.
5. சமந்தாவுக்கு அதிக சம்பளம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.