சினிமா செய்திகள்

தவறுதலாக போதைப்பொருள் குற்றச்சாட்டு சோனியா அகர்வால் கோபம் + "||" + Sonia Agarwal angry over misdemeanor drug charge

தவறுதலாக போதைப்பொருள் குற்றச்சாட்டு சோனியா அகர்வால் கோபம்

தவறுதலாக போதைப்பொருள் குற்றச்சாட்டு சோனியா அகர்வால் கோபம்
தவறுதலாக போதைப்பொருள் குற்றச்சாட்டு சோனியா அகர்வால் கோபம்.
பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் தலை முடியை தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்துள்ளனர்.


இந்த நிலையில் பிரபல கன்னட நடிகையான சோனியா அகர்வால் வீட்டில் சோதனை நடத்தி 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஒரே பெயருடன் இருப்பதால் தமிழ் நடிகை சோனியா அகர்வாலை இதில் தவறுதலாக இழுத்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கோபமான தமிழ்நடிகை சோனியா அகர்வால் கூறும்போது, ''முதலில் யார் என்பதை உறுதி செய்து எழுதுங்கள். சமூக வலைத்தள வதந்திகளை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஆனாலும் இது ஒரு தீவிரமான விஷயம். என்னை அழைத்தாவது உறுதி செய்து இருக்க வேண்டும். நான் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கிறேன்.'' என்றார்.

மேலும் டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்’' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா நடத்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்கிறார்கள்: காங்கிரஸ்
மத்திய அரசுக்கு எதிரான கொள்கையை வகுக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார் மற்றும் சில மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.
2. சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்: சிவசேனா அறிவிப்பு
சோனியா காந்தி தலைமையில் 20-ந் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்க இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.