சினிமா செய்திகள்

‘அனபெல் சேதுபதி’ படத்தின் திரைக்கதை விவாதத்தில் விஜய் சேதுபதி-டாப்சி + "||" + Vijay Sethupathi-Topsy in the screenplay discussion of the film 'Anabel Sethupathi'

‘அனபெல் சேதுபதி’ படத்தின் திரைக்கதை விவாதத்தில் விஜய் சேதுபதி-டாப்சி

‘அனபெல் சேதுபதி’ படத்தின் திரைக்கதை விவாதத்தில் விஜய் சேதுபதி-டாப்சி
பொதுவாக ஒரு படம் படப்பிடிப்புக்கு போகும் முன் திரைக்கதை விவாதத்தில் டைரக்டரும், உதவி டைரக்டர்களும் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
கதாநாயகன்-கதாநாயகி கலந்து கொள்வதில்லை. ஆனால், ‘அனபெல் சேதுபதி’ என்ற படத்தின் கதை விவாதத்தில், அந்த படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி, கதாநாயகி டாப்சி ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.

‘‘இது, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். டைரக்டரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகி இருக்கிறார். சுதன் சுந்தரம் தயாரிக்கிறார். ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், சுரேஷ்மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளிவரும்’’ என்று தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறினார்.