யோகி பாபு நடித்து வரும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தின் பெயர் மாறுகிறது


யோகி பாபு நடித்து வரும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தின் பெயர் மாறுகிறது
x
தினத்தந்தி 3 Sep 2021 5:33 AM GMT (Updated: 2021-09-03T11:03:49+05:30)

காடுகளையும், அதன் அழகையும் எடுத்துக் காட்டும் விதமாக, ‘வீரப்பனின் கஜானா’ என்ற படம் தயாராகி வந்தது. படத்தின் பெயரை மாற்றும்படி சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனின் குடும்பத்தினர், படக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு படக்குழுவினரும் சம்மதித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து நடிக்கிறார். யாசின் டைரக்டு செய் கிறார். பிரபாதீஸ் சாம்ஸ் தயாரிக்கிறார்.

‘‘காடுகள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாகி விடுவார்கள். வனவிலங்குகளை ரசித்து பார்ப்பார்கள். அவர்களை இந்த படம் திருப்தி செய்யும்’’ என்கிறார், டைரக்டர் யாசின்.

Next Story