பார்த்திபன்-கவுதம் கார்த்திக்குடன் ‘யுத்த சத்தம்’


பார்த்திபன்-கவுதம் கார்த்திக்குடன் ‘யுத்த சத்தம்’
x
தினத்தந்தி 3 Sep 2021 5:40 AM GMT (Updated: 2021-09-03T11:10:06+05:30)

பல வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் எழில் அடுத்து ஒரு படத்தை தயாரித்து டைரக்டு செய்கிறார். இது, மர்மங்கள் நிறைந்த திகில் படம்.

படத்துக்கு ‘யுத்த சத்தம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் பார்த்திபன், கவுதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி, புதுமுகம் சாய் பிரியா.

படத்தை பற்றி டைரக்டர் எழில் கூறியதாவது:-

‘‘யுத்த சத்தம் என் மனதுக்கு நெருக்கமான படம். என் பாணியில் இருந்து மாறுபட்ட படைப்பு. மர்மங்களுடன் கூடிய பரபரப்பான திகில் படம். பிரபல நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நான், பார்த்திபனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறேன். திரைக்கதையில் மாயாஜாலம் புரிபவர், அவர். அவரை பெரிய திரையில் இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அவர் அட்டகாசமாக நடித்தும் இருக்கிறார்.’’

Next Story