சினிமா செய்திகள்

மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல நடிகர் அஜித் திட்டம்...? + "||" + After Valimai wrap-up, Thala Ajith goes on a bike trip in Russia. Viral pics out

மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல நடிகர் அஜித் திட்டம்...?

மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல நடிகர் அஜித் திட்டம்...?
நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் பைக்கில் சென்றுவந்தார்.
சென்னை

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகை ஹூமா குரேஸி ஹீரோயினாக நடிக்கிறார்.எச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். 

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின்  படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், கார் சண்டைகாட்சி  ஒன்று படமாக்க வேண்டி இருந்தது. இந்த காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு இருந்தனர்.

கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா சென்றனர். அங்கு பிரம்மாண்டமானகார் சண்டை  காட்சியை 10 நாட்கள் படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷியாவிலேயே தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஷியாவில் படப்பிடிப்பை முடித்த அஜீத்,ரஷ்யா முழுவதும் 5,000 கிமீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். ந

இந்த நிலையில் ரஷியாவில் உயர் ரக  மோட்டார் சைக்கிளுடன்  அஜித் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், சிக்கிம் வரை, சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் அஜித் மோட்டார் சைக்கிளில் சென்றுவந்தார். 

அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத மோட்டார் சைக்கிள் பயணங்கள் அவரது பயணத்தின் மீதான ஆர்வத்தை காட்டுகின்றன.

வெவ்வேறு நிலப்பரப்புகள் மற்றும் வானிலை நிலைமைகளுடன் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள , அஜித் தனது மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தீவிரமாக பரிசீலித்து வருவதாக சமீபத்தில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்து இருந்தன.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்கார் விருது போட்டிக்கு தமிழ் படமான கூழாங்கல் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ தேர்வு
இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், மலையாள படத் தயாரிப்பாளர் சாஜி என்.கருண் தலைமையில் மேற்கண்ட 14 திரைப்படங்களையும் பார்வையிட்டனர்.
2. வழக்கு எதற்கு, மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்: சமந்தாவுக்கு நீதிமன்றம் அறிவுரை
தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசிய வழக்கறிஞர் மீது நீதிமன்றத்தில் நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்
3. வேதனையாக இருக்கிறது.. உதவுங்கள் பிரதமர் மோடி.. நடிகை சுதா சந்திரன் உருக்கமான வேண்டுகோள்!
ஏர்போர்ட் போன்ற பெரிய இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நம் நாட்டில் நிலவுகிறது.
4. கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...! வைரலாகும் நயன்தாரா வீடியோ
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
5. சீரடி சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று சாமிகும்பிட்டனர்.