சினிமா செய்திகள்

ரிலீசுக்கு தயாரான விஜய்சேதுபதி படங்கள் + "||" + Vijay Sethupathi pictures ready for release

ரிலீசுக்கு தயாரான விஜய்சேதுபதி படங்கள்

ரிலீசுக்கு தயாரான விஜய்சேதுபதி படங்கள்
விஜய்சேதுபதி கைவசம் 11 படங்கள் உள்ளன.
விஜய்சேதுபதி கைவசம் 11 படங்கள் உள்ளன. இவற்றில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி ஆகிய 4 படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. லாபம் படத்தை மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கி உள்ளார். இதில் நாயகியாக சுருதிஹாசன் வருகிறார். இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுகின்றனர். துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதியுடன் பார்த்திபன், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தொலைக்காட்சியிலும் ஓ.டி.டி. தளத்திலும் வெளியாக உள்ளது. அனபெல் சேதுபதி படத்தில் விஜய்சேதுபதியுடன் டாப்சி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. கடைசி விவசாயி படத்தில் விஜய்சேதுபதியுடன் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமனிதன் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் டீசர் வெளியானது..!
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
2. சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு
சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் .