சினிமா செய்திகள்

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு + "||" + Vijay Sethupathi's eloquent speech at the tribute show

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு
விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘லாபம்’ படத்தை மறைந்த டைரக்டர் ஜனநாதன் இயக்கியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.
விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘லாபம்’ படத்தை மறைந்த டைரக்டர் ஜனநாதன் இயக்கியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு விஜய் சேதுபதி பேசினார். அவர் பேசியதாவது:-


‘‘டைரக்டர் ஜனநாதனிடம் பழகிய அனுபவங்களை இங்கு பல பேர் பகிர்ந்து கொண்டார்கள். அவருடைய உதவியாளர் ஆலயமணி பேச முடியாமல் போய் உட்கார்ந்து விட்டார். எனக்கும் அந்த உணர்வுதான். ஜனநாதன் இறந்த அன்று படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கு நான் ‘டப்பிங்’ பேச வேண்டியிருந்தது. அந்த வேலை இல்லாவிட்டால், நான் அவருடன் இருந்திருப்பேன்.

அவர் இறந்தபோது யாரும் பக்கத்தில் இல்லை. இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஜனநாதனுக்கும், எனக்கும் இருந்த உறவு, ஒரு தந்தைக்கும், மகனுக்குமான உறவு போன்றது. காலம் இவ்வளவு கேவலமானது என்று தெரியவில்லை. பக்கத்தில் இருக்கும்போது அவருடைய அருமை தெரியவில்லை. தெரிந்திருந்தால், அவருடன் இன்னும் கொஞ்சம் நேரத்தை செலவிட்டு இருப்பேன்.

யாராவது உங்களிடம் அன்பு பாராட்டினால், அவருடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். அன்பு காட்டி, உறவை மேம்படுத்துங்கள். இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு முழுகாரணமும், ஜனநாதன்தான்.

நான் 4 படங்கள் தயாரித்து இருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினால், என்னுள் இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையை கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விதத்தில் சிந்திக்க தூண்டுகிறது. அப்படி சிந்திக்க தூண்டும் வகையில், ஆறுமுககுமார் தயாரித்து இருக்கிறார்.’’

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக புவிசார் குறியீட்டு பொருட்களின் தரம் குறைந்து விடக் கூடாது: முதல்-அமைச்சர் பேச்சு
தமிழக புவிசார் குறியீட்டு பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அதன் தரம் குறைந்துவிடக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. தொழிலாளர்கள் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சர் பேச்சு
தொழிலாளர்கள் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.
3. “மத மோதல்களை தூண்டுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” முதல்-அமைச்சர் பேச்சு
கூலிப்படை ஆதிக்கம் விரைவில் ஒழிக்கப்படும் என்றும், மத மோதல்களை ஏற்படுத்துவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிக அவசியம் -நிர்மலா சீதாராமன் பேச்சு
‘தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம்' என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
5. தமிழகத்தில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது: முதல்-அமைச்சர் பேச்சு
தமிழர்கள் தடம் பதித்த பகுதியில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் இரும்பு பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.