‘‘காதல் கடிதம் கொடுத்தால் கோபப்பட மாட்டேன்’’ -ராசிகன்னா


‘‘காதல் கடிதம் கொடுத்தால் கோபப்பட மாட்டேன்’’ -ராசிகன்னா
x
தினத்தந்தி 5 Sep 2021 2:19 AM GMT (Updated: 2021-09-05T07:49:46+05:30)

தமிழ் பட உலகுக்கு மும்பையில் இருந்து சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அழகி, ராசிகன்னா.

தமிழ் பட உலகுக்கு மும்பையில் இருந்து சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அழகி, ராசிகன்னா. இவருக்கு மளமளவென்று பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான மும்பை நடிகைகள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்களாகவே இருப்பார்கள். அந்த வரிசையில் இவரும் இருக்கிறார்.

படப்பிடிப்பின்போது தன்னை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுடன் கைகுலுக்கி கலகலப்பாக பழகுகிறார். அவரிடம், ‘‘ரசிகர்களுடன் தாராளமாக பேசிப்பழகுகிறீர்களே...யாராவது ஒருவர் உங்களிடம் காதலை சொன்னாலோ, காதல் கடிதம் கொடுத்தாலோ என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது.

‘‘ஸாரி, என்னால் இப்போதைக்கு காதலிக்க முடியாது. சினிமாவில் கொஞ்சமாவது சாதிக்க விரும்புகிறேன்’’ என்று பக்குவமாக சொல்லி புரியவைப்பேன்’’என்றார்.

‘‘யாராவது உங்களுக்கு காதல் கடிதம் கொடுத்து இருக்கிறார்களா?’’ என்று கேட்டதற்கு ‘‘படிக்கும்போது, ஒரே ஒருவர் மட்டும் கொடுத்தார். நான் அதற்கு பதில் சொல்லவில்லை. அவரும் பிரச்சினை பண்ணாமல் போய்விட்டார்’’ என்கிறார், ராசிகன்னா.

Next Story