நகைச்சுவை பேய் வேடத்தில் சன்னி லியோன்


நகைச்சுவை பேய் வேடத்தில் சன்னி லியோன்
x
தினத்தந்தி 5 Sep 2021 2:24 AM GMT (Updated: 2021-09-05T07:54:49+05:30)

கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் வருகிறார். இந்த படத்துக்கு, ‘ஓ மை கோஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் ஏற்கனவே சில இந்தி படங்களில், படுகவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

ஒரே மாதிரியான கவர்ச்சி வேடங்களே அவரை தேடி வருகின்றன. வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடிக்க விரும்புகிறார். அந்த வகையில் அவர் நடிக்க சம்மதித்து இருக்கும் படம்தான், ‘ஓ மை கோஸ்ட்.’ படத்தை பற்றி டைரக்டர் ஆர்.யுவன் சொல்கிறார்:-

‘‘இந்த படத்தில் ரசிகர்கள் ஒரு மாறுபட்ட பேயை பார்க்கலாம். இதுவரை திரையில் கண்டிராத ஒரு வித்தியாசமான திகில் படம், இது. சன்னி லியோன் பேய் வேடத்தில் நடிக்க, அவருடன் தர்சா குப்தா, சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு சென்னையில், மிக விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் சன்னி லியோன் கலந்து கொள்கிறார்.

Next Story