சினிமா செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், யானையை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுப்பு + "||" + Actor Sivakarthikeyan adopts lion and elephant at Vandalur zoo

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், யானையை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், யானையை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் மற்றும் ஒரு பெண் யானையை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளார்.
வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று.

பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக இப்பூங்கா விலங்கு தத்தெடுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.


இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்குக்கான ரசீது மற்றும் பூங்காவினை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்

இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பூங்காவிலுள்ள விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும், பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் 6 மாத காலத்திற்கு தத்தெடுப்பு செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது அவருடைய விலங்குகளின் மீதான அக்கறை மற்றும் ஆர்வத்தை அடையாளப்படுத்துகிறது. சிங்கம் மற்றும் யானையை தத்தெடுத்ததின் மூலமாக அவர் சிங்கங்கள் மற்றும் யானைகளின் பாதுகாப்பிற்காக பெரும் அளவில் குரல் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் அனு என்ற வெள்ளைப்புலியை 2018-2020 ஆண்டுகளில் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயன் பட டைரக்டர் பெயரில் மோசடி
நடிகர் நடிகைகள் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி பண மோசடி நடப்பதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன.
2. "18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்" - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
3. வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்
நடிகர், நடிகைகள் வீட்டில் காலியாக உள்ள இடத்திலும், மொட்டை மாடியிலும் காய்கறி தோட்டங்கள் அமைத்து வருகின்றனர்.
4. நலிந்த நடிகர்களுக்கு உதவிய சிவகார்த்திகேயன்
கொரோனா ஊரடங்கினால் திரைப்பட துறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நிதி திரட்டி உதவிகள் வழங்கி வருகிறார்.
5. சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது.