சினிமா செய்திகள்

கார்த்தி ஜோடியாக அறிமுகம் டைரக்டர் ஷங்கர் மகள் கதாநாயகியானார் + "||" + Karthi duo debut director Shankar's daughter became the heroine

கார்த்தி ஜோடியாக அறிமுகம் டைரக்டர் ஷங்கர் மகள் கதாநாயகியானார்

கார்த்தி ஜோடியாக அறிமுகம் டைரக்டர் ஷங்கர் மகள் கதாநாயகியானார்
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக உள்ள ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியானார்.
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக உள்ள ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியானார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கனமான கதாபாத்திரமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இந்த படத்துக்காக அதிதி நடிப்பு பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்தி உள்ளார். விருமன் படத்தை சூர்யா தயாரிக்கிறார். இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோரும் நடிக்கின்றனர். முத்தையா இயக்குகிறார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே கொம்பன் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்தார் படமும் கைவசம் உள்ளது.