சினிமா செய்திகள்

பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது + "||" + The trailer for the Friendship movie has been released

பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
ஹர்பஜன் சிங், அர்ஜூன், லாஸ்லியா, சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
மும்பை,

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற லாஸ்லியாவும் தமிழில் அறிமுகமாகும் படம் 'பிரண்ட்ஷிப்'. 

இப்படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சூர்யா இயக்கியிருக்கிறார்கள்.  இப்படத்தில் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   இப்படத்தில் ஹர்பஜன் சிங் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.  

படப்பிடிப்பு முடிந்து தணிக்கையில் பிரண்ட்ஷிப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருந்த நிலையில் அப்படத்தின் 'சூப்பர் ஸ்டார் ஆந்தம் ' என்கிற தலைப்பில் வெளியாக இருக்கிற பாடலை சிம்பு பாடியிருக்கும் தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானதைத் தொடர்ந்து தற்போது அப்படம் வருகிற செப்டம்பர் -17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்பில் இருக்கும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன், அர்ஜூன், லாஸ்லியா, சதிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வரும் செப்டம்பர் 17ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.