சினிமா செய்திகள்

உருவ கேலியை எதிர்கொண்ட இலியானா + "||" + Ileana confronted with image mockery

உருவ கேலியை எதிர்கொண்ட இலியானா

உருவ கேலியை எதிர்கொண்ட இலியானா
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் மற்றும் கேடி படங்களில் நடித்துள்ள இலியானா இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் மற்றும் கேடி படங்களில் நடித்துள்ள இலியானா இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட உருவ கேலி அனுபவங்கள் குறித்து இலியானா அளித்துள்ள பேட்டியில், ‘ஒரு சமயத்தில் நான் ஒல்லியாக இருந்தேன். எடையும் குறைவாக இருந்தது. உடல் ரீதியான பிரச்சினைகளும் இருந்தன. அப்போது என்னை பார்த்து சிலர் கேலியாக சிரிப்பார்கள். இன்னும் சிலர் தகாத வார்த்தைகளால் பேசினர்.


அந்த காயம் இப்போதும் எனக்குள் ஆறாமல் இருக்கிறது. பின்னர் மருத்துவர்கள் உதவியோடு தன்னம்பிக்கையை வளர்த்தேன். உலகில் உள்ள எல்லோரும் பரிபூரணமாக இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு குறை இருக்கும். நாம் அதை தெரிந்து கொண்டு சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

எல்லோருக்குமே தன்னம்பிக்கை இருக்க வேண்டும். மற்றவர்கள் கேலியை கண்டுகொள்ளக்கூடாது. அவற்றை எதிர்கொள்ளும் சக்தி வேண்டும். என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதுதான் முக்கியம். மற்றவர்கள் நினைப்பது தேவையில்லாத விஷயம். எனது உடலோடுதான் சேர்ந்து வாழ்வேன். இப்போது எனது உடல்தோற்றத்தை நினைத்து கவலைப்படுவது இல்லை’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. வருத்தத்தில் இலியானா
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.