அமிதாப்பச்சன் பாராட்டில் நெகிழ்ந்த சூர்யா


அமிதாப்பச்சன் பாராட்டில் நெகிழ்ந்த சூர்யா
x
தினத்தந்தி 7 Sep 2021 7:06 AM GMT (Updated: 2021-09-07T12:36:35+05:30)

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்தது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்தது. திரைப்பட விழாக்களில் விருதுகளும் குவித்தது. ஆஸ்கார் போட்டிக்கும் அனுப்பி விருது பெறாமல் திரும்பியது.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இந்த நிலையில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சூரரை போற்று படத்தை பார்த்து அதில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கண்ணீர் சிந்தியதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். அமிதாப்பச்சன் பாராட்டை கேட்டு சூர்யா நெகிழ்ந்துபோய் உள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், “இதுமாதிரியான தருணங்களும், இதுபோன்ற கனிவான வார்த்தைகள் கொண்ட பாராட்டுகளும்தான் சூரரை போற்று படத்துக்கான பெரிய வெகுமதிகள். அமிதாப்பச்சன் பாராட்டில் நெகிழ்ந்து போய் விட்டேன்'' என்று கூறியுள்ளார்.


Next Story