நடிகை குஷ்பு ஏற்கனவே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பணியாற்றிவிட்டு இப்போது பா.ஜனதா கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார்.
நடிகை குஷ்பு ஏற்கனவே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பணியாற்றிவிட்டு இப்போது பா.ஜனதா கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். ஆசிரியர் தினத்தையொட்டி குஷ்பு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது வழிகாட்டியாகவும், குருவாகவும் உள்ள கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் எனக்கு அரசியல் என்பது வெறுப்பதும், விரக்தியும் கிடையாது. அது நம்பிக்கை மற்றும் சேவை சார்ந்தது என்று சொல்லி கொடுத்து இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவை பார்த்த சிலர் குஷ்பு மீண்டும் தி.மு.க.வுக்கு செல்ல போகிறாரா? என்று கேள்விகள் எழுப்பினர். அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தி.மு.க.வுக்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள் போல என்று விமர்சித்து இருந்தார்.
இதனால் கோபமான குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “கடவுளே, அம்மா உங்களுக்கு குரு மரியாதை சொல்லி கொடுக்கவில்லை. பாவம் நீங்கள். இதுதான் கருணாநிதிக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். உங்களுக்கு சின்ன புத்தி. குருவை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் நன்றாக கற்று இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அது உங்களுக்கு தெரியாது'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அரசியல், சினிமா சார்ந்த நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
மேற்கு வங்காள முதல் மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும் எனவும் குஷ்பு ஏ.என்.ஐ செய்தி நிறுனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனக்கு கோபம் அதிகம் வரும். காதலர் தினத்தில் நிறைய பேர் வாழ்த்து அட்டைகள், ரோஜா மலர்களை கொடுப்பார்கள். அவற்றை அங்கேயே கிழித்து எறிந்து விடுவேன் என்று நடிகை நிதி அகர்வால் பேட்டியில் கூறியுள்ளார்.