24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரபுதேவா - அரவிந்த் சாமி?


24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரபுதேவா - அரவிந்த் சாமி?
x
தினத்தந்தி 7 Sep 2021 8:28 AM GMT (Updated: 2021-09-07T13:58:40+05:30)

நடிகர்கள் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிச்சா சுதீப் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்கள் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story