சினிமா செய்திகள்

தனுஷ்-நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது + "||" + Dhanush film footage has been leaked on the internet

தனுஷ்-நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது

தனுஷ்-நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது
பொன்னியின் செல்வன் படக்காட்சிகளைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் காட்சிகளும் இணையத்தில் கசிந்துள்ளன.
சென்னை,

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்துக்கு பிறகு தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். நாயகிகளாக ராஷிகன்னா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே குட்டி, உத்தமபுத்திரன் படங்கள் வந்துள்ளன, திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தனுசின் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு காட்சிகளும் இணைய தளத்தில் கசிந்துள்ளன.

படப்பிடிப்பு தளத்தில் தனுசுடன் ராஷிகன்னா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. தொடர்ந்து தனுஷ் மற்றும் நித்யாமேனன் ஒரு பாடல் காட்சியில் ஆடும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். படக்காட்சியை கசியவிட்டது யார் என்றும் விசாரணை நடக்கிறது.