சினிமா செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் மரணம் + "||" + Akshay Kumar's mom Aruna Bhatia dies in Mumbai

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் மரணம்
படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்‌ஷய் குமாருக்கு அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். இவருடைய தாய் அருணா பாட்டியா சமீபத்தில்  உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அருணா பாட்டியா இன்று உயிரிழந்தார்.

'சிண்ட்ரெல்லா' என்ற  படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்‌ஷய் குமாருக்கு அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக  அக்‌ஷய் குமார், ஷூட்டிங்கை பாதியில் நிறுத்துவிட்டு இந்தியா விரைந்துளார்.

அக்‌ஷ்ய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில். தாயார் தான் எனக்கு அனைத்துமாக இருந்தார்கள். எனக்கு தீராத வலியைக் கொடுத்துட்டு, இன்றைக்கு காலையில் அம்மா, அப்பாவோட உலகத்துக்கு சென்று  விட்டார்கள் என கூறி உள்ளார்.

மேலும் எனக்கும், என் குடும்பத்திற்கும் ரசிகர்கள் உங்கள் ஒவ்வொருவரின் வேண்டுதலும் உதவியாக இருக்கும். என்னோட எல்லா நேரத்துலயும் கூட இருந்து அவங்களுக்காக வேண்டிக்கிட்ட எல்லோருக்கும் நானும் என் குடும்பமும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அக்‌ஷய் குமாருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுல நண்பர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர்
விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.
2. தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்
தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி, மோசமாக பேசினார் என்று இன்டீரியர் டிசைனர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
3. பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வயதில் காலமானார்
4. கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா
விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்து உள்ளார்.
5. யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...!
குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது.