சினிமா செய்திகள்

மீண்டும் திகில் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + Aishwarya Rajesh in horror story again

மீண்டும் திகில் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மீண்டும் திகில் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார்.
தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்கிறார். கனா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது தமிழில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களும், 3 தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.


இந்த நிலையில் புதிய திகில் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே பூமிகா, திட்டம் இரண்டு ஆகிய திகில் கதைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். தற்போது மீண்டும் திகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டி உள்ளது. அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஆசிரியையாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். தினேஷ் லட்சுமணன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் திகில் கதை வித்தியாசமான வேடத்தில் லாரன்ஸ்
மீண்டும் திகில் கதை வித்தியாசமான வேடத்தில் லாரன்ஸ்.
2. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் பரதநாட்டியக் கலைஞராக ஐஸ்வர்யா ராஜேஷ்
கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாள படம், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்.’ இந்த படம் அதே பெயரில் தமிழில் தயாராகி இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ராய் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள்.
3. வரலாற்று பின்னணியில் சன்னி லியோன் நடிக்கும் நகைச்சுவை திகில் படம்
நகைச்சுவை-திகில் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். நகைச்சுவை, திகில் இரண்டும் சரிசம விகிதத்தில் கலந் திருக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.