நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் நடிகர் மம்முட்டி நெகிழ்ச்சி


நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் நடிகர் மம்முட்டி நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 Sep 2021 7:12 PM GMT (Updated: 2021-09-09T00:42:33+05:30)

கடந்த 7-ந்தேதி மம்முட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மம்முட்டி, தமிழில் தளபதி, அழகன், மவுனம் சம்மதம், மக்களாட்சி, அரசியல், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 7-ந்தேதி மம்முட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் நெகிழ்ச்சியான மம்முட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பிறந்த நாளில் எல்லோரும் காட்டிய அன்பை பார்த்து நெகிழ்ந்து போனேன். ரசிகர்கள் தங்கள் அன்பை பல வகையாக வெளிப்படுத்தி எனது மனதை தொட்டுவிட்டனர். பொதுவாக எனது பிறந்த நாளை கொண்டாட நான் தயங்குவது உண்டு. ஆனால் என்னை தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் வாழ்த்தியதால் இது சிறந்த நாளாக மாறி உள்ளது. இந்த தருணத்தில் நான் முழுவதுமாக ஆசீர்வதிக்கப்பட்டவனாக என்னை உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.

Next Story