தேசிய செய்திகள்

'வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் கைது + "||" + Web series producer arrested for `raping' woman by promising role

'வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் கைது

'வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் கைது
'வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான ஆஷிஷ் சில திரைப்படங்களையும், 'வெப்’ தொடரையும் தயாரித்துள்ளார். 

இதற்கிடையில், 'வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஆஷிஷ் மீது கடந்த மார்ச் மாதம் 21 வயது நிரம்பிய இளம் பெண் மும்பை கோரிகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் ஆஷிஷ் பவ்ஷர் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஷிஷ் பவ்ஷரின் முன் ஜாமீனை கோர்ட்டு ரத்து செய்து செய்தது.

இந்நிலையில், முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆஷிஷ் பவ்ஷரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சமீர் வாங்கடே மீதான நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகள்: கவர்னர் தலையிட மராட்டிய பாஜக கடிதம்
சமீர் வாங்கடே மீது நவாப் மாலிக் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் மராட்டிய கவர்னர் தலையிட வேண்டும் என்று பாஜக கடிதம் எழுதியுள்ளது.
2. மராட்டியம்; 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை..!
3 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி மராட்டிய மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.
3. எனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வருகிறது - சமீர் வான்கடேவின் மனைவி பரபரப்பு புகார்...!
தனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் மனைவி தெரிவித்துள்ளார்.
4. மராட்டியம்: ரூ 1.44 கோடி மதிப்புடைய 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 4 பேர் கைது
மராட்டியத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
5. ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அடர்னி ஜெனரல்
சொகுசு கப்பலில் போதைவிருத்தில் பங்கேற்ற வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.