சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது + "||" + Annaatthe First Look

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது
நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை டைரக்டர்  சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். 

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது. 

நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று  அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார். 

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று  விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படுகிறது. 

 காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர்
விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.
2. தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்
தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி, மோசமாக பேசினார் என்று இன்டீரியர் டிசைனர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
3. பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வயதில் காலமானார்
4. கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா
விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்து உள்ளார்.
5. யோகி பாபுவுடன் ஜோடி சேரும் ஓவியா...!
குழந்தைகளுக்கான படம். அவர்களிடையே அறிவியலை வளர்க்கும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது.