சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு + "||" + annatha motion poster released

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று  காலை படக்குழு வெளியிட்டது.  ரஜினி நிற்கும் அண்ணாத்த படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர்  மாலை வெளியிடப்பட்டுள்ளது. 

நாடி நரம்பு முறுக்க, ரத்தம் கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க, தொடங்குது ஓங்கார கூத்து என ரஜினிகாந்த் பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்சனுடன் தொடர் ஆலோசனையில் ரஜினி..!
நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 169' படத்தின் கதை குறித்து இயக்குனர் நெல்சனுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
2. கே.ஜி.எஃப்2 படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்
யாஷ் நடிப்பில் உலகமுழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கே.ஜி.எஃப் 2 படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
3. பிரபல நடிகரை பாரட்டிய ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினி பிரபல நடிகர் ஒருவரை பாராட்டியுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
4. 'டாணாக்காரன்' படத்திற்காக விக்ரம் பிரபுவை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!
'டாணாக்காரன்' திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் பிரபுவை, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
5. 'பயணி' ஆல்பம் பாடல் : நடிகர் ரஜினிகாந்த் வெளியீடு
பயணி ஆல்பம் பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்