சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது


சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது
x
தினத்தந்தி 10 Sep 2021 6:01 PM GMT (Updated: 2021-09-10T23:31:32+05:30)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் பல மாதங்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் பல மாதங்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது. இதையடுத்து டாக்டர் படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

படங்களை ஓ.டி.டியில் வெளியிடும் முடிவுக்கு பட அதிபர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்றும் எச்சரித்து உள்ளனர். இதையும் மீறி சிவகார்த்திகேயன் படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா என்ற பரபரப்பு நிலவியது.

தற்போது தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து டாக்டர் படத்தை அடுத்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதன் மூலம் டாக்டர் ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது. இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story