சினிமா செய்திகள்

சர்ச்சை கதையில் அனுஷ்கா + "||" + Anushka in the controversy story

சர்ச்சை கதையில் அனுஷ்கா

சர்ச்சை கதையில் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஓ.டி.டி, தளத்தில் வெளியானது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஓ.டி.டி, தளத்தில் வெளியானது.

அதன்பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. வாய்ப்புகளும் வரவில்லை. அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் கதாநாயகர்கள் அவருடன் ஜோடி சேர மறுக்கிறார்கள். கடும் உடற்பயிற்சிகள் செய்தும் எடையை குறைக்க முடியவில்லை.


இந்த நிலையில் 25 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதல் கதையில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. கதை அனுஷ்காவுக்கும் பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இருப்பதால் உடனடியாக தன்னால் படப்பிடிப்புக்கு வர முடியாது என்றும் அடுத்த வருடம் படப்பிடிப்பை நடத்தினால் நடிக்கிறேன் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். படக்குழுவினரும் அதனை ஏற்றுள்ளனர். இந்த படத்தில் குறைந்த வயது இளைஞரை காதலிக்கும் 40 வயது பெண்ணாக சர்ச்சை கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: விசாரணை நடத்த பா.ஜனதா குழு அமைப்பு அண்ணாமலை அறிக்கை
கே.டி.ராகவன் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் விசாரணை நடத்த பா.ஜனதா மாநிலச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2. சர்ச்சை பேச்சு விவகாரம்: கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது.
3. துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா?
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.
4. நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகள்
நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படத்தில் சர்ச்சை காட்சிகள் தணிக்கை வாரியம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.