சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை சினிமா படமாகிறது + "||" + Cricketer Ganguly's life becomes a movie

கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை சினிமா படமாகிறது

கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை சினிமா படமாகிறது
கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன.
கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. தற்போது கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற உண்மை சம்பவத்தை 83 என்ற பெயரில் படமாக்கி உள்ளனர்.


இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவி ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனேவும் நடித்து உள்ளனர். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்து உள்ளார்.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாக உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கையும் சபாஷ் மித்து என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் டாப்சி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கையும் படமாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே கங்குலி தனது வாழ்க்கை சினிமா படமாக தயாரானால் அதில் தன்னுடைய வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். எனவே இந்த படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் : உம்ரான் மாலிக்கை பாராட்டிய கங்குலி..!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
2. கங்குலி கேட்ட ஒரு கேள்வி.. இரவு முழுவதும் தூங்காமல் இருந்த யுவராஜ்..!! - சுவாரசிய நிகழ்வு
யுவராஜ் தனது முதல் சர்வதேச போட்டிக்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.
3. மும்பையில் சச்சின் விக்கெட்டை வீழ்த்திய அக்தர் ; கேள்விகேட்ட கங்குலி : கொந்தளித்த ரசிகர்கள்- சுவாரசிய நிகழ்வு
சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதால் ரசிகர்கள் கொந்தளித்த சம்பவத்தை அக்தர் நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.
4. பள்ளி பாட புத்தகத்தில் புனித் ராஜ்குமார் வாழ்க்கை
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
5. 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான இயல்பு வாழ்க்கை!
தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி கொரோனா காலடி எடுத்துவைத்தது.