சினிமா செய்திகள்

சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு + "||" + Vadivelu in Chandramuki Part 2

சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு

சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு
வடிவேலு கூறும்போது, “எனக்கு நடிக்க விதித்திருந்த தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி, அடுத்து 5 புதிய படங்களில் நடிக்கிறேன்'' என்றார்.
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின், 2-ம் பாகம் படத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் பல வருடங்களாக அவர் நடிக்கவில்லை.


தற்போது சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டு தடையை நீக்கி உள்ளதால் புதிய படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். வடிவேலு கூறும்போது, “எனக்கு நடிக்க விதித்திருந்த தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி, அடுத்து 5 புதிய படங்களில் நடிக்கிறேன்'' என்றார்.

நாய்சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2-ம் பாகத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினியிடன் வடிவேல் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?
பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.